Monday, May 21, 2012

கக கக ககவென ஒரு கவிதை

வணக்கம் நேயர்களே, சில நாட்களாக நான் கட்டுரை வடிவில் நம்முடைய வலைப்பூவில்(blog) எதுவும் எழுத இயலவில்லை. இதற்கு முக்கியக் காரணங்கள் 1)நேரமின்மை 2)கவிதைகள் மேல் ஏற்பட்டுள்ள அதிக ஈர்புமே ஆகும்

கவிதைகள் மிக குறுகிய நேரத்தில் எழுத முடிவதாலும், கட்டுரைகளை போல அதிக ஆராய்ச்சி தேவை படாததும் எனக்கு கவிதைகள் மேல் ஒரு அதிக ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்னுடைய புதிய கவிதை ஒன்றை உங்கள் பார்வைக்கு இப்பொழுது சமர்பிக்கிறேன்.


கரு கரு கருவென காற்றில் காதல்
தட தட தடவென துடிக்கும் இதயம்
பட பட படவென பறக்கும் கால்கள்
நன நன நனவென உந்தன் நினைவு
சட சட சடவென சரியும் மனது
துரு துரு துருவென திக்கும் தொண்டை
கல கல கலவென அதிர்ந்தது என் மண்டை
ரர ரர ரரவென என்னுள் உந்தன் ராஜ்ஜியம்
பப பப பபவென பெண்ணே நீ இன்றி நான் ஒரு பூஜ்ஜியம்
யல யல யலேவென நானும் எழுதினேன் ஒரு மொக்க பாடல்
தல தல தலவென என்னுளும் ஒரு காதல்.


உங்களிடம் இருந்து விடைபெறுவது
என்றும் அன்புடன்
ப்ரியதர்ஷன்









No comments:

Post a Comment