வணக்கம் வாசகர்களே , உங்கள் அனைவரையும் என்னுடைய எழுத்தின் மூலம் பல நாட்கள் கழித்து சந்திப்பதில் மிக மகிழ்ச்சியாக உள்ளது .
இந்த கட்டுரையை நான் St.Charles,Missouri இருந்து எழுதுகிறேன் . வாழ்க்கையில் பல மாற்றங்கள் நடந்து விட்டது , அவை அனைத்தையும் இந்த வலைப்பதிவு மூலம் பகிர்ந்து கொள்கிறேன் .
|
Taken during the GM Invitational Tournament, Photo Credits:Mike Wilmering and St.Louis Chess Club |
நான் Lindenwood University, B.A Marketing course படித்து கொண்டிருக்கிறேன், அது மட்டுமின்றி எங்கள் கல்லூரியின் சதுரங்க அணியின் top ranked player ஆக உள்ளேன்.
வித்யாசமான சூழல் , புது மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு , புது நட்புக்கள் என்று எல்லாம் புதுமையாய் உள்ள இந்த வாழ்க்கையில் பல சந்தோஷங்களும்,சோகங்களும் கலந்து உள்ளன .
|
Priyadharshan,Venkat and Luke infront of an Indian Restaurant |
தாய் நாட்டை விட்டு 4 வருடம் பிரிந்து இருக்க போகும் சோகம், அது மட்டுமின்றி எங்கள் கல்லூரியில் இந்தியாவில் இருந்து படிக்கும் மாணவர் எண்ணிக்கை 4 தான்! ஆனாலும் ஒரு நல்ல விஷயம் அந்த 4 கில் சென்னை சேர்ந்த நண்பர் வெங்கட் ஒருவர் , அதனால் தமிழில் உரையாட ஒரு வாய்ப்பு இருக்கும் சந்தோஷம் ஒரு ஆறுதலான விஷயம் என்று நான் கருதுகிறேன்.
இங்குள்ள தட்பவெட்ப சூழ்நிலை மிகவும் மாறக்கூடியது ஒரு நாள் குளிரின் உச்சியிலும் அடுத்த நாள் வெய்யில் பொலபொலவென்று தாக்கும் ஒரு சூழ்நிலை . அனாலும் நம் நாட்டை விட குளிரான ஒரு தட்பவெட்ப சூழ்நிலை எனக்கு மிகவும் பிடித்துள்ளது . இப்பொழுது இங்கு பனிக்காலம், குளிரின் உச்சகட்டமாக -டிகிரி celsius குளிர் உள்ளது.
|
Picture of the Campus taken on 19-12-2012 |
தனிமை என்பது ஒரு விவரிக்க முடியாத ஒரு எண்ண ஓட்டமாகவே உள்ளது ,பல முறை கல்லூரி வளாகத்தில் இயற்கையை ரசித்து கொண்டு ஒரு இனிமையான தமிழ் பாடலை கேட்கும் சுகம் அலாதியாக இருக்கும். ஆனால் பல முறை அதே தனிமை ஒரு விதமான அலைகடல் அர்பரிபதை போல ஒரு என்னத்தை உருவாக்குகிறது, இந்த மாதிரி பல தனிமை நொடிகளில் என்னை காப்பற்றியதும் பல அழகிய தமிழ் திரை பாடல்களே.
பல நல்ல நண்பர்களை விட்டு மிக தூரம் வந்து விட்ட ஒரு எண்ணம் எனக்கு அடிகடி வருகிறது அதன் ஒரு பிரதிபலிப்பே என் பிறந்த நாள் அன்று பல என்னுடைய நெருங்கிய நண்பர்கள் எனக்கு வாழ்த்து தெரிவிக்காதலில் இருந்து நான் தெரிந்து கொண்டேன் .இதை எப்படியாவதும் செரி செய்து விட வேண்டும் என்கிற என்ன ஓட்டம் என்னுள் தொடர்ந்து இருந்து வருகிறது.
மசால் தோசையும் பரோட்டாவும் அடிக்கடி என் கனவில் வந்து செல்கிறது, அந்த அளவிருக்கு நம்முடைய ருசிகர உணவை மிஸ் பன்னுகிறேன் , பாதி நாட்கள் burger and noodles நம்முடைய மதிய மற்றும் இரவு உணவாக அமைந்து விடுகிறது . ஒரு 20 நாட்கள் மதுரை வந்து நன்றாக சாப்பிட்டு விட்டு நல்ல தூங்கனும் போல மிகவும் ஆசையாக உள்ளது என்று இந்த ஆசை நிறை வெறும் என்று பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
|
Eating Chicken wings during my birthday with my chess teammates |
உங்களிடம் இருந்து அடுத்த வலைபதிவு எழுதும் வரை விடை பெறுவது , உங்கள் நேசமும் பாசமுமான ப்ரியதர்ஷன் !!!
A perfect nuance of someone who truely misses his homeland..!
ReplyDelete@Sahana Planned to write it a big more extensive, but writing this much itself using the transliterate was very tough, that I decided to keep this article, this short
ReplyDeleteAfter reading this article i have second thoughts about sending my daughter abroad for higher studies. ஒரு 20 நாட்கள் மதுரை வந்து நன்றாக சாப்பிட்டு விட்டு நல்ல தூங்கனும் போல மிகவும் ஆசையாக உள்ளது என்று இந்த ஆசை நிறை வெறும் என்று பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
ReplyDeleteevalo yekkam!!!!!As a mother i cant tolerate these sort of feelings.
Bhuvana Nagrajan